பதிவு செய்த நாள்
25
ஜன
2023
11:01
கண்டமங்கலம், : விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம், பாக்கம் (பாக்கம் கூட்ரோடு) ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடந்தது. மாலை 4.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று 25ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை 26ம் தேதி காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, தத்வார்ச்சனை, நாடி சந்தானம், மகா தீபாராதனைக்குப்பின், கடம் புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் விநாயகர் மற்றும் பரிவாரங்களுடன், மன்னாதீஸ்வரர், பச்சைவாழி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் வேணுகோபால், பொருளாளர் விஜயரங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம், பாக்கம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.