Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி ... பழநி மலைக்கோயில் படிப்பாதை, உப தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் பழநி மலைக்கோயில் படிப்பாதை, உப தெய்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : நாளை நடக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : நாளை நடக்கிறது

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
11:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நாளை (27ம் தேதி) கும்பாபிஷேக விழா நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த , 2005ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. தற்போது, 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதையடுத்து, விமான பாலாலயம் கடந்தா ண்டு செப்., மாதம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, விமான கோபுரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் பெயின்ட் அடித்து புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டன. கடந்த , 1953ம் ஆண்டு கோவில் இருந்தது போன்று தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில், 13 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த , 23ம் தேதி விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜைகள் நடைபெற்றன. இன்று காலை , 8:30 மணிக்கு இரண்டாம் காலயாகம் துவக்கம், வேதிகார்ச்சனையும், காலை , 11:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காலை , 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை , 5:30 மணிக்கு மூன்றாம் காலம் யாக பூஜைகள் நடக்கின்றன. நாளை (27ம் தேதி) காலை , 6:00 மணிக்கு நான்காம் கால யாகம் துவக்கம், காலை , 7:30 மணிக்கு நாடிசந்தானம், காலை , 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது. காலை , 9:44 மணிக்கு மேல், 9:55 மணிக்குள், ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மஹா கும்பாபிஷேகமும், காலை , 9:55 மணிக்கு மேல், 10:25 மணிக்குள் விநாயகர் , முருகப்பெருமான், அங்காளஅம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலயமஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை , 11:00 மணிக்கு அன்னதானம், மாலை , 5:00 மணிக்கு மஹாஅபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபா ராதனை , மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar