பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டியில் கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜன.,25ல் கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 2ம் கால யாகபூஜை, கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார் பிரகாஷ் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு பல்வகை சிறப்பு அபிஷேகம் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தீரன் சின்னமலை கவுண்டர் இளைஞர் பேரவை, கவுண்டர் நலச் சங்கம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். அலங்காநல்லுரர் அருகே அய்யூர் அக்னிவீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார் மலையன் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. ஏற்பாடுகளை அய்யூர் அக்னிவீரன் சுவாமி கோயில் பங்காளிகள் கிராமத்தினர் செய்திருந்தனர்.