ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் : இரட்டை பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2023 08:01
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூபதி திருநாள் (தைத்தேர்) உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் மூன்றாம் திருநாளான நேற்று மாலை ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் திருக்கோயிலிலிருந்து வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி உத்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவத்தின் நான்காம் திருநாளான இன்று காலை ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் திருக்கோயிலிலிருந்து இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பாடு வழிநடை உபயங்கள் கண்டருளி, வீரேஸ்வரம் என்ற இடத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.