சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை வேட்டார்குளத்தில் அமைந்துள்ள ஆதிமாசாணியம்மன் கோயில் திருவிழா ஜன.21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.28 ல் கோயிலின் எதிரே உள்ள வழிபாட்டு தலத்தில் மாயான பூஜை நிகழ்ச்சி நடந்தது. ஜன.29 ல் (நேற்று)வைகை யாற்றிலிருந்து பூசாரி சின்னமாயன் தலைமையில் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தது. ஜன.30 ல் (நாளை) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் ஜன.31 ல் முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று வைகையாற்றில் கரைத்தல் நிகழ்வும், அன்று இரவு மகாமுனீஷ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சின்னமாயன் குடும்பத்தினரும், ராஜபாண்டி, முருகேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.