திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுக் கொண்டடிருக்கும் பூபதி திருநாள் (தைத்தேர்) உற்சவத்தின் நான்காம் திருநாளான நேற்று மாலை ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மாம்பழச் சாலையில், வீரேஸ்வரம் என்ற இடத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்திலிருந்து, தங்க கருட சேவையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்களுடன் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, இராஜகோபுரம் வழியாக உத்திரை வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்த்தார்.
இன்று (30ம் தேதி) பூபதி திருநாள் (தைத்தேர்) உற்சவத்தின் ஐந்தாம் நாளில், காலை 5.15 மணியளவில் ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் சேஷ வாகனத்தில் (ஆதி சேஷன் நம்பெருமாளை வணங்கிய படி இருக்கும்) புறப்பட்டு, உத்திரை வீதிகளில் வலம் வந்தருளி வாஹன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் காலை 7.15 மணியளவில் திருக்கோயிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, வழி நடை உபயங்கள் கண்டருளி டிரான்ஸ்லேட்டர் ராமராவ் மண்டபம் சென்றடைந்தார். இங்கிருந்து மாலை 6.00 மணியளவில் ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு கண்டருளி உத்திரை வீதிகளில் வலம் வந்து . இரவு 9.15 மணியளவில் கண்ணாடி அறை சென்றடைகிறார்.