Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துக்குமாரசாமி கோவிலில் ... குருந்தமலையில் தேரோட்டம் நடத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி ஆண்டவர் கோவிலில் முளைப்பாலிகை ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2023
05:01

அன்னூர்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் முளைப்பாலிகை ஊர்வலத்துடன் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. அன்னூர் அருகே சாலையூரில், 2000 ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக் கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இங்கு பழனி ஆண்டவர் சுயம்புவாக அருள் பாலிக்கிறார்.

இங்கு பல கோடி ரூபாய் செலவில் கருங் கற்களால், கருவறை, மகா மண்டபம், சித்தர்கள் சன்னதி, பரிவார தெய்வங்கள் சன்னதி அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. காலையில் அன்னூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து எண் திசை காவலர் வழிபாடு, நவகோள் வழிபாடு, திருவருட்சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் ஆகியவை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 10:00 மணிக்கு விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் 108 மூலிகைப் பொருட்களை யாக குண்டத்தில் சமர்ப்பிப்பதும் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலையில் விநாயகர், சித்தர்கள் மற்றும் மூர்த்திகளுக்கும், இரவு மூலவர் பழனி ஆண்டவருக்கும் எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. பிப். 1ம் தேதி காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல் மற்றும் சித்தர் சன்னதிகளுக்கும், 9:45 மணிக்கு விமான கலசங்கள் மற்றும் பழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar