பதிவு செய்த நாள்
30
ஜன
2023
05:01
பல்லடம்: பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், பக்தர்கள், உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
பல்லடம் அடுத்த, மாதப்பூரில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இங்குள்ள மலை மீது முத்துக்குமாரசாமி அருள் பாலிக்கிறார். இக்கோவிலில், கொங்கு மண்டல அப்பரடி பொடி அய்யா சொக்கலிங்கம் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. காலை, 8 மணிக்கு உழவாரப் பணி துவங்கியது. கோவில் வளாகம், மலைப்பகுதி, மற்றும் கிரிவலப் பாதை பகுதிகளில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள், கழிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, முட்புதர்கள், களைச்செடிகள் ஆகியவை வெட்டி அகற்றப்பட்டன. கோவில் வளாகம் முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. மாலை, 4 மணி வரை நடந்த உழவாரப்பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக காலை 11:00 மணிக்கு முத்துக்குமாரசாமி, மரகதாம்பிகை, மகிமாலீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.