பதிவு செய்த நாள்
30
ஜன
2023
05:01
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் தேரோட்டம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமை வாய்ந்த குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தேரோட்டத்தில் பங்கேற்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா நோய் தொற்று காரணமாக, கோவில் நிர்வாகம் தேரோட்டத்தை நடத்தவில்லை. நோய் தொற்று குறைந்து, பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கோவில்களிலும் நடைபெறும் வழிபாடுகள், திருவிழா வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க அரசு அனுமதி ணவழங்கியுள்ளது. இதையடுத்து டதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கஆபக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் கோவில் நிர்வாகம், தைப்பூச நாளில் சப்பரத்தில் சுவாமி, திருவீதி உலா நடைபெறும் என அழைப்பதில் அச்சிட்டுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: காரமடையில் அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை அடுத்து, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெறும். இதில் காரமடையை சுற்றியுள்ள அனைத்து கிராம பொதுமக்கள், கோவை, நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். காரமடை சுற்றியுள்ள கிராம மக்கள், இதை விழாவாக கொண்டாடி வருவர். இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணம் காட்டி, கோவில் நிர்வாகம் தேரோட்டத்தை நடத்தவில்லை. இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பிப்ரவரி ஐந்தாம் தேதி தைப்பூசம் என்பதால், அதற்குள் தேரை அலங்காரம் செய்து, தேரோட்டம் நடத்த, கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.