பதிவு செய்த நாள்
31
ஜன
2023
11:01
சூலூர்: சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, பிப்., 10 ம் தேதி நடக்கிறது.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத திரு வேங்கடநாத பெருமாள் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா, வரும், பிப்., 7 ம்தேதி மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. 8 மற்றும் 9;ந்தேதி ஐந்து கால ஹோம பூஜைகள் நடக்கின்றன. பிப்., 10 ம்தேதி காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால ஹோமம், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விமானம், கோபுரம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. யாகசாலை பூஜை வேளைகளில் நான்கு வேத பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் , ஸ்ரீ ராமாயண பாராயணங்களும், இன்னிசை கச்சேரிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழாவை ஒட்டி, நேற்று முளைப்பாலிகை இடும் பூஜை நடந்தது. தாசபளஞ்சிக சமூக சூலூர் வேங்கடநாத பெருமாள் கோவில் குலதெய்வ வழிபாட்டு குழுவினர், சூலூர் வழிபாட்டு குழுவினர், புதூரார் மருதாசல தேவர் திருத்தேர் அறக்கட்டளை, அன்னதான கமிட்டியினர், மார்கழி கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.