பதிவு செய்த நாள்
01
பிப்
2023
02:02
நத்தம், நத்தம் அருகே நடுமண்டலம் கிராம் ந.புதுப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி ஜன-31 கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூர்ணாகுதி, தீபாகரனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், வேதஜபபாராயணம், மருந்து சாற்றுதல், நவரத்தின பஞ்சலோக எந்திர பிரதிஷ்டை , பூர்ணாவதி தீபாரனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது . தொடர்ந்து இன்று புண்ணியாஹவாசனம், பிம்மசுத்தி, நாடி சந்தானம், பிம்பரக்ஷ்க்ஷாபந்தனம், ஸபர்ஸாஹீதி, செளபாக்யத்ரவ்யாஹுதி, வாசனைப், சதுர்த்வார பூஜை , வேதிகா அர்ச்சனை, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகளும் நடந்தது. மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. கருட தரிசனத்துடன் அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனிதஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் கும்பங்களின் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா, திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், தொழிலதிபருமான வி.அமர்நாத், மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை புதுப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.