காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 02:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வரும் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் (ஆர்ச்) வளைவுகளை ஏற்பாடு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோயில் அருகில் ஜல விநாயகர் கோயில் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலையரங்கமான தூர்ஜடி கலை அரங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் நடக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் வரிசைகளை கட்டுதிட்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வரிசைகளில் சலசலப்பு ஏற்பட்டது அந்த அனுபவங்களை கருத்தில் கொண்டு போலீஸ் அதிகாரிகள் கோயிலுக்குள் வரிசைகளை பரிசீலித்து வருகின்றனர் .புதிதாக எவ்வித மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக கோயில் நுழை வாயிலில் இருந்து தக்ஷிணாமூர்த்தி சன்னதி வரை உள்ள வரிசை மற்றொரு வரிசை யும் இணைவதால் பக்தர்கள் அவதிக்குள் ஆகின்றனர் .இம்முறை அது போன்ற அனுபவங்கள் நடக்க விடாமல் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சொர்ணமுகி ஆற்றில் நடக்க உள்ள திரிசூல ஸ்நானம் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி உற்சவத்திற்கு முன்னர் வரும் (பிப்.)ஐந்தாம் தேதி மாசி மாத பௌர்ணமி அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து திரிசூலத்தை வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக சொர்ணமுகி (ஆற்றில்) ஆறு வரை ஊர்வலம் ஆக கொண்டு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவதை தொடர்ந்து திரிசூல ஸ்தானம் நடத்துவர்.பக்தர்கள் புனித நீராடுதல் இதற்காக (திரிசூல ஸ்நாகத்திற்காக) கடந்த ஆண்டு வரை அங்குள்ள சிறிய பகுதியில் சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் சிறு பகுதியில் மட்டுமே பக்தர்களுக்கு புனித நீராடுதலுக்காக தண்ணீர் குட்டையை தோன்டினர் .ஆனால் இந்த ஆண்டு திரிசூல ஸ்தானம் பக்தர்கள் பக்தர்கள் புனித நீராடுவதற்கும் தண்ணீர் குட்டை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று புதன்கிழமை (1.2. 2023) புதன்கிழமை அன்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்வர். இதில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்தும் பல்வேறு துறையினர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள், முன்னேறுபாடுகள், நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி அறிவுரை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.