தஞ்சையில் சுவாமி விவேகானந்தர் : பிப்.,3ல் மாணவர்கள் பேரணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 06:02
தஞ்சாவூர்: கடந்த 1897ம் ஆண்டு, அமெரிக்க சிகாகோ நகரில், இந்திய நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தை உலகறியச் செய்து, வீர உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், ராமேஸ்வரம் வழியாக தாயகம் திரும்பினார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் புறப்பட்ட, பிப்.3ம் தேதி தஞ்சாவூர் வந்தடைந்தார்.
அவரை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். அங்கு ஆசி வழங்கி விட்டு உரையாற்றினார். பின்னர், அங்கிருந்து கும்பகோணத்துக்கு சென்று, மூன்று நாட்கள் தங்கி பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். தஞ்சாவூரில் ரயில்வே ஸ்டேஷனில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், பட்டயம், விவேகானந்தரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவாமிஜி தஞ்சை வருகையை போற்றும் வகையில் வரும் பிப்., 3ம் தேதி காலை 9.15 மணியளவில் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் பேரணியும், சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் தலைமை வகிக்கிறார்.