பதிவு செய்த நாள்
02
பிப்
2023
08:02
பழநி: பழநி, கோயில் தைப்பூச திருவிழாவில் நாளை (பிப்.3) முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழாவின் ஜன.29ல் கொடி ஏற்றப்பட்டது. தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்று, வள்ளி,தெவசேனா முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சப்பரம், ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு வாகனத்தில் தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.2) மாலை இரவு 7:30 மணிக்கு வெள்ளி யானையில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருக்கல்யாணம்: தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான நாளை(பிப்.3ல்) காலை 9:00 மணிக்கு தந்த பல்லாக்கில் ரத வீதி உலா நடைபெறும். மாலை 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் வள்ளி, தெய்வநாயகி அம்மன், முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சாமி ரத வீதி உலா நடைபெறும்.
திருத்தேரோட்டம்: பிப்.4., ல் காலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். 12:00 மணிக்குள் பெரியநாயகி அம்மன் கோயில், சுவாமி திருத்தேரில் எழுந்தருளி மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்று திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வரும். பிப்.7க ல் மாலை 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெறும். இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு பெறும். தைப்பூச கலைநிகழ்ச்சிகள், மலைக் கோயில், அடிவாரம், குடமுழுக்கு நினைவரங்கத்தில், பக்தி சொற்பொழிவு பக்தி இன்னிசை நடைபெறும்.