சாணார்பட்டி, சாணார்பட்டியில் உள்ள விநாயகர், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமத்துடன் 3 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று யாக பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க புனித தீர்த்த குடங்கள் கோவிலைச் சுற்றி வந்து கோவிலின் உச்சியில் உள்ள கும்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தங்கள் கும்பங்களின் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.