பதிவு செய்த நாள்
02
பிப்
2023
05:02
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், வரும், 5 ம்தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், தைப்பூச விழா, கடந்த, 28 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை திருவீதி உலா, ஹோமம் முடிந்து, மதியம் அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 4ம்தேதி தேர் கலசம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் முருகன் திருவீதி உலா நடக்கிறது.5 ம்தேதி காலை, 7:00 மணிக்கு முருகப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் முருக பக்தர்கள் காவடி பூஜை செய்து, சென்னிமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.