காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2023 04:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இம் மாதம் 13ம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க உள்ள மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தில் சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி கூறினார் . ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள த்ரிநேத்ரா விருந்தினர் மாளிகையில் இன்று கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதில் அவர் பேசுகையில் மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வுகளான (ஆதி தம்பதிகள் )சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம், கிரிவலம் தேர் திருவிழா போன்ற முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்றார். கடந்த ஆண்டுகளில் சிவராத்திரி பிரம்மோற்சவ விழா அனுபவங்களை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக இருக்க வேண்டும் என்றார். ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையினர் ஒருங்கிணைந்து நகர முழுவதும் மட்டுமின்றி கோயில் வளாகம் முழுவதும் தூய்மையாக இருக்கச் செய்ய வேண்டும் என்றார்.மேலும் குடிநீர் மற்றும் கொசு நிவாரணைக்காக (பாக்கிங்) மருந்து தெளிக்க வேண்டும் என்றார். போலீஸ் துறையினர் எந்தவித சிறிய அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் கூடுதல் பாதுகாப்போடு செயல்பட வேண்டும் என்றார். பக்தர்களின் வாகனங்கள் ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து மற்றத்தை அறியும் வகையில் ஒவ்வொரு இடத்திலும் குறி ஈடு பலகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரியும் வகையில் தகவல் பலகைகள் அமைக்க வேண்டும் என்றார் . மேலும் அன்னதானம் மற்றும் பிரசாத மையங்கள் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் .இதேபோல் வருவாய் மற்றும் போலீஸ் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்.
குறிப்பாக குழந்தை திருமணம் நடக்காமல் குழந்தைகள் நலத்தினர் மற்றும் போலீஸ் துறையினர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார் .இம்மாதம் 18ஆம் தேதி மகாசிவராத்திரியை தொடர்ந்து லிங்கோதபவ தரிசனத்திற்காக போலீசார் சிறப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் .மேலும் மருத்துவ மையங்கள் மற்றும் 108 வாகனங்கள் கோயில் வளாகத்தில் இருக்க வேண்டும் என்றார் .இதேபோல் அரசு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதே போல் மகாசிவராத்திரி உற்சவங்களில் வீதி உலாக்களில் செல்லும் வாகனங்கள் தரம்( fitness) சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதே போல் திருப்பதி மாவட்ட எஸ்பி பரமேஸ்வரர் ரெட்டி பேசுகையில் அனைத்து வாகனங்களையும் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றார் கோயில் ஊழியர்கள் அதிகாரிகள் தங்களின் அடையாள அட்டைகள் பயன்படுத்த வேண்டும் என்றார். அடையாள அட்டை இல்லாமல் வாகனங்களை கோயில் வளாகத்தில் அனுமதிக்கலாகாது என்றும் , கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் . மேலும் பெண் போலீசார் உதவியுடன் குழந்தை திருமணங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரிக்கு வி.சாகர் பாபு திருப்பதி ஆர் டி ஓ கனகாநரசா ரெட்டி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.