அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி நெசவாளர் காலனியில் கங்கை முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது. நேற்று காலை கோபுர கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.