பதிவு செய்த நாள்
02
பிப்
2023
05:02
அவிநாசி: அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட பழங்கரை ஊராட்சி, ஆயிக் கவுண்டம்பாளையம் ஸ்ரீ ரங்கராய பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,பொன் சோழீஸ்வரர் கோவிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மங்கள இசையுடன் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து,அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம்,துவார,தோரண, கும்ப ஆராதனம், 108 மூலிகை திரவிய ஹோமம் என முதற்கால வேள்வி ஹோம பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,இரண்டாம் கால ஹோம வேள்வி பூஜையில் வேதிகார்ச்சனை, சகல தேவதா காயத்ரி ஹோமம், யாத்ரா தான சங்கல்பம் நடைபெற்றதையடுத்து மஹா கும்பங்கள் யாகசாலையில் இருந்து மூலாலயம் வலம் வந்து,மும்மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானங்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ குமார் பட்டர் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது .தொடர்ந்து தசதானம், மஹா திருமஞ்சனம் அலங்காரம், மஹா தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டியர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.