ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 11:53
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பூபதி திருநாளை முன்னிட்டு, இன்று அதிகாலை தை தேரோட்டம் நடந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று அதிகாலை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.