பதிவு செய்த நாள்
03
பிப்
2023
11:55
பெ.நா.பாளையம்: இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று ஹோமம் நடந்தது.
விழா, நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, வேதபாராயணம், திவ்ய பிரபந்தம், ஹோமம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு மேல், 4:00 மணிக்குள் உற்சவர் யாகசாலை எழுந்தருளால் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து வேத பாராயணம், சாற்றுமுறை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா அதை தொடர்ந்து தச தரிசனம், வேத பிரபந்த சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம், திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.