சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான உற்சவம், 5 முதல், 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை நடக்கிறது. இதில், கபாலீஸ்வர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் ஆகியோர் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.