வட்டமலை முருகன் கோவில் பாலம் 5ம் தேதி திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 05:02
பாலக்காடு: புகழ்பெற்ற வட்டமலை முருகன் கோவிலின் பாலம் திறப்பு விழா வரும் பிப்., 5 தேதி நடைபெறுகின்றன.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் நடுவை உள்ள கோவில் வட்டமலை ஸ்ரீ முருகன் கோவில். சுமார் 200 ஆண்டு பழமை வாய்ந்தது இக்கோவில். மழை காலங்களில் வெள்ள பெருக்கால் இக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டிருந்தனர். அந்த நிலையில் 2018ல் மாநிலம் கண்டிடாத மழை வெள்ள பாதிப்பில் தனிமைப்பட்ட கோவிலின் சில பகுதிகள் சேதமடைந்தனர். இந்த நிலையில் நகராட்சியின் நிதியுதவியாலும் தன்னார் அமைப்பின் நன்கொடையாலும் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்தினர். அதேபோல் கனவாக இருந்து கோவிலுக்கு என ஒரு பாலத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பித்தன. பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழா வரும் பிப்., 5ம் தேதி நடக்கின்றன. விழாவில் கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் பாலத்தை பக்தர்களுக்கு திறந்தளிக்கின்றனர். வளாகத்தில் வைத்து நாடக்கும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், எம்.பி.,க்களான ஸ்ரீகண்டன், ரம்யா ஹரிதாஸ், எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், நகராட்சி தலைவி பிரியா அஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றன. விழா ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளதாக கோவில் நிர்வாக குழு உறுப்பினரும் நகராட்சி கவுன்சிலருமான நடேசன் தெரிவித்தார்.