பதிவு செய்த நாள்
04
பிப்
2023
02:02
சாயல்குடி: சாயல்குடியில் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலையில் கும்பாபிஷேகம் நடந்தது. சத்திரிய இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் பெரிய அளவில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. பிப்., 1 அன்று அணுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
விநாயகர், பத்திரகாளியம்மன், சிவன், பாலசுப்பிரமணியன், பார்வதி, மாரியம்மாள், துர்க்கை அம்மன், மாடசாமி, முருகன், வள்ளி, தெய்வானை, தடசிணாமூர்த்தி, பனையடியான், வெள்ளையம்மாள், பொம்மி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் பத்திரகாளியம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் பத்திரகாளி அம்மன் உற்சவமூர்த்தி ரதவீதியுலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.