மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பஜனை நடந்தது.நெய்வேலி மந்தாரக்குப்பம் எஸ்.பி.டி., நகர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில் திருப்பதி தேவஸ்தான இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகக் குழு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். திருப்பதி இந்து தர்ம பிரசார பரிஷத் உதவி அமைப்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். என்.எல்.சி., முதன்மை மேலாளர் குணசேகரன் துவக்கி வைத்தார்.நெய்வேலி ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயலகம் செயலர் வைணவ ரத்னா, ஸ்ரீமத் கோவிந்த சீதாராம ராமானுஜ தாசன் ஆகியோர் திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடத்தினர். தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை சிவக்குமார், கோவில் நிர்வாகிகள் நாகராஜ், ஜோதிபாசு, விஜயபிரகாஷ், சிவக்குமார், உதயகுமார் செய்திருந்தனர்.