தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் விஜய விழா நேற்று 5ம் தேதி தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடைபெற்றது.
1897, பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணம் சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கியதை முன்னிட்டு பிப்ரவரி 5- ஆம் தேதி கும்பகோணம் ரயில்வே நிலையம் மற்றும் போர்ட்டர் டவுன்ஹாலில் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகளும், தொடர்ந்து சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. நகர மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் விவேகானந்தர் ஓவியத் திருவிழா நிகழ்ச்சியில் 101 மாணவர்கள் பங்கேற்றனர். சிறந்த ஓவியங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.