ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் தைத்தேரோட்டம் உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 07:02
திருச்சி: பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற் று வந்த பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேரோட்டம் உற்சவம் கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கி நேற்று (5ம்தேதி) ஆளும் பல்லக்கு உற்சவத்துடன் நிறைவடைந்தது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையும், மாலையும் ஸ்ரீநம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரைவீதிகளில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். திருத்தேர் வடம் இழுத்தல் வைபவம் பிப்ரவரி 3ம் தேதியும், சப்தாவரணம் 4ம் தேதியும் நடைபெற்றன. நிறைவு நாளான நேற்று உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார். மதியம் 3.00 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கவிலாச மண்டத்தில் எழுந்தருளினார். மண்டபத்திலிருந்து இரவு 8.00 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சுபகிருது வருடத்திற்கான தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியார்கள் செய்திருந்தனர்.