பதிவு செய்த நாள்
07
பிப்
2023
05:02
கருமத்தம்பட்டி: சென்னியாண்டவர் கோவிலில், தைப்பூச மகா தரிசன பூஜை நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காட்டில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூச விழா கடந்த, ஜன., 28 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. யானை, ஆடு, மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. கடந்த, 5 ம்தேதி மாலை, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று பரிவேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று காலை அபிஷேகம் முடிந்து, மகா தரிசன பூஜை , திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கொடி இறக்குதல், காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராட்டுடன் பூஜைகள் நிறைவு பெற்றன.