அவிநாசி: மஹா சிவராத்திரியையொட்டி, அவிநாசியில் ஆதியோகி ரத யாத்திரை. மஹா சிவராத்திரி 18 ம் தேதி, சிவாலயங்களில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கின்றது. சிவராத்திரியையொட்டி தென் கபிலாய பக்தி பேரவை சார்பில் ஏழு அடி உயரமுள்ள ஆதியோகி திருமேனியுடன் கூடிய ரதம் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவிநாசி பகுதிகளில் ரதம் வலம் வந்தது. ஏராளமான பொதுமக்கள் ஆதியோகி தரிசனம் செய்தனர்.