பதிவு செய்த நாள்
08
பிப்
2023
12:02
பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், தமிழரங்கு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு சிவதீட்சை அளிக்கும் நிகழ்ச்சி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று நடந்தது. அதனைத்தொடர்ந்து, தவத்திரு சாந்தலிங்கர் மாத குரு வழிபாடு நடந்தது. அதன்பின், சிதம்பர அடிகளார் நூலகம் சார்பில், கோவை கிழார் எழுதிய,தமிழரங்கு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தமிழரங்கு என்ற நூலை வெளியிட, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நூலை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஹரிப்பிரியா மற்றும் அன்பர்கள் கலந்து கொண்டனர்.