அவிநாசி: அவிநாசி ஒன்றியம், ராக்கியாபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம், குண்ணாங்கல் காடு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக,தீர்த்த குடம் எடுத்தல், மஞ்சள் முடிப்பு, பட்டு எடுத்து வருதல், படைக்கலம் மற்றும் அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், குதிரை எடுத்து ஊர்வலமாக வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர்,கருப்பராயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பொங்கல் விழாவின் நிறைவாக மஞ்சள் நீர் விழா நடைபெறுகின்றது.