பதிவு செய்த நாள்
09
பிப்
2023
12:02
கோவை: வேலாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சிறப்பு தீர்த்த அபிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை, கணபதி ஹோமத்துடன் நேற்று நிறைவடைந்தது.
வேலாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சிறப்பு தீர்த்த அபிஷேக விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன், நேற்று பக்தர்களால் கொண்டாடப்பட்டது. நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு, புண்ணிய ஸ்தலங்களிலிருந்து பக்தர்களால் எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள், தாடகம் சாலையிலுள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. மதியம் 3:00 மணிக்கு தீர்த்த குடங்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை நோக்கி புறப்பட்டது.நேற்று காலை 6:00 மணிக்கு, ஹோமபூஜைகளை சிவஸ்ரீ சதீஷ் சிவாச்சாரியார் துவக்கி வைத்தார். தொடர்ந்து, தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து, மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மாலை 4:00 மணிக்கு மாவிளக்கு ஏந்தியும், முளைப்பாரி சுமந்தும் பெண் பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாலை 6:00 மணிக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி விளக்குக்கு மலரிட்டு, குங்கும திலகமிட்டனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வேலாண்டிபாளையம் யாதவ விழாக்குழுவினர்