காளியம்மன் கோவிலில் வீரன் சிலைக்கு பித்தனை ஈட்டி பிரதிஸ்ட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2023 05:02
காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை உஜ்ஜையினி காளியம்மன் கோவிலின் புதிதாக வீரன் சிலைக்கு பித்தளை ஈட்டி பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது.
காரைக்கால் கயிலாசநாத சுவாமி மற்றும் நித்தியகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்க்கு உட்பட்ட ஆற்றங்கரை உஜ்ஜையினி காளியம்மன் கோவிலின் வலது உட்புறத்தில் அமைந்துள்ள வீரன் சிலையின் முன்பகுதியில் பித்தளை வேல் நிறுவப்பட்டிருந்த்தது அந்த வேலை மாற்றி அதற்கு பதிலாக பித்தளை ஈட்டி வைக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை ஏற்று நேற்று ஈட்டியை மாற்றி தேவஸ்தான மூத்த சிவாச்சாரியார் சட்டநாதன் சிவாச்சாரியார் ஆலோசிக்கப்பட்டு நாஜிம் எம்.எல்.ஏ.. தலைமையில் தேவஸ்தான அரங்காவலர்கள் வாரியம் குழுமுன்விலையிலும் சிறப்பு ஹோம பூஜைகளுடன் சுவாமி வீரன் சிலைக்கு பித்தளை ஈட்டி பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரியம் குழு தலைவர் வெற்றிச்செல்வன் வழக்கறிஞர். துணை தலைவர் புகழேந்தி, பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.