பதிவு செய்த நாள்
09
பிப்
2023
06:02
பல்லடம்: பல்லடம் அருகே, பிரத்யங்கரா தேவி கோவிலில், பத்தாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தில் அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில் பிரத்யங்கிரா தேவி மூலவராக அருள் பாலிக்கிறார். கோவாவின், பத்தாவது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, நேற்று மகா கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, வேத பிரார்த்தனை, கலச பூஜை , பிரத்தியங்கிரா தேவி நவரவர்ண அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தன. ஆஞ்சநேயர் பொங்கு சனீஸ்வரர் பைரவர், அஷ்டலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை, 7:30 மணி முதல், அதர்வண பத்ரகாளி மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. விநாயகர் கோவிலில் இருந்து புனித கலச தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அதர்வண பத்ரகாளிக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரித்திங்கரா தேவி அருள் பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.