பதிவு செய்த நாள்
10
பிப்
2023
07:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, ஜன., 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். ஐந்தாம் நாள் உற்சவமான, ஜன., 31ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான பிப்.,2ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 5ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது. இதில், 10ம் நாள் திருவிழாவாக, பிப்., 5ல், 20 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உற்சவமான பிப்., 7ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. நேற்று காலை திருமுறை திருவிழாவுடன் தைப்பூச பெருவிழா நிறைவு பெற்றது.