பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், நேற்று மாலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவில், திப்பம்பட்டி பூங்கா நகர் சிவசக்தி கோவில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைமாதம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடும் நடைபெற்றது.
பூஜையில், சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடங்கள் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று மாலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பவுர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக பக்தர்கள் பின்பற்றி, விரதம் இருக்கின்றனர். அவ்வகையில், நேற்று உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர். உடுமலை அமராவதி நகர் சித்தி விநாயகர் கோவில், சுற்றுப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. - நிருபர் குழு -..