பொள்ளாச்சி: திப்பம்பட்டி பூங்கா நகரில் உள்ள, சிவசக்தி உடனமர் மலையாண்டீஸ்வரர் கோவிலில், வாராஹி அம்மன் சன்னதியில், வளர்பிறை வசந்த பஞ்சமி வழிபாடு நேற்று நடந்தது. அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.