பதிவு செய்த நாள்
11
பிப்
2023
09:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில், புதிதாக கருமாரியம்மன் கோவில் கட்டப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 8ல் கொடி ஏற்றப்பட்டு கங்கா பூஜை, கோமாதா பூஜை, கணபதி பிரார்த்தனை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மஹா சங்கல்பம், கணபதி பூஜை நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி பிரார்த்தனை, கலச அர்ச்சனை, கருமாரியம்மன் பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடந்தன. காலை, 9:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக நடந்தது. தொடர்ந்து கருமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.