பதிவு செய்த நாள்
11
பிப்
2023
10:02
சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் -1 செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான, இஸ்ரோ விரைவில் விண்ணுக்கு அனுப்ப உள்ளது, என, அதன் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் கே.சிவன், மனைவி மாலதி தரிசனம் செய்தனர். அவர் கூறியதாவது: மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தொடர வேண்டும். அவர்கள் தாங்களாகவே ஸ்டார்ட் அப் ஒன்றை உருவாக்கி ஆராய்ச்சியில் ஈடுபடலாம். இதுபோன்று ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்வெளி ஆராய்ச்சித்துறையில் நல்ல வளர்ச்சியடைந்த நாடாக, இந்தியா இருக்கிறது. மற்ற நாடுகளிடமும், விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியாவிற்கு நன்மதிப்பு உள்ளது.சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் -1 செயற்கைக்கோளை, இஸ்ரோ விரைவில் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து, செயற்கைக்கோளை உருவாக்குதல் உட்பட பல திட்டங்களை, இஸ்ரோ வைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.