பரமக்குடி: பரமக்குடியில் தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு அம்மன் கோயில்களில் நடந்தது. பரமக்குடி துர்க்கை அம்மன் கோயிலில் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். *பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை வெள்ளி ஊஞ்சல் சேவை நடந்தது. அப்போது சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் தாயார் மண்டபத்தில் அருள்பாலித்தனர். *முத்தாலம்மன் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.