சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே தோட்டனூத்தில் மாரியம்மன்,பகவதி அம்மன்,காளியம்மன், கருப்பணசாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த பிப்.8 முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக் குட புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாரியம்மன் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும்,அதனைத் தொடர்ந்து விநாயகர்,பகவதி அம்மன்,காளியம்மன் மற்றும் கருப்பணசாமி மூலாலய மகா கும்பாபிஷேகமும், பின்னர் சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது.அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பூஜை மலர்களும், தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசமடைந்து அரோகரா கோசமிட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.