பதிவு செய்த நாள்
11
பிப்
2023
03:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மாணிக்கவாசக நகரில் திருநீலகண்டர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் மாணிக்கவாசக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடம் தீர்த்த நாயகி உடனமர் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இங்குள்ள மாணிக்க விநாயகர் கோவில் வளாகத்தில் திருக்கோவிலுடன் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவகிரக திருக்கோவில்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி, லட்சுமி, நவக்கிரகம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ஆகியன நடந்தன. தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜை, யாக வேள்விகள் நடந்தன. புனித நீர் அடங்கிய திருக்குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, கோவில் கோபுரங்களுக்கு சதாசிவ சிவாச்சாரியார் தலைமையில் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மும்மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம், திருக்கல்யாண உற்சவம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.