மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அமைந்துள்ள வேடியப்பர் கோவில் திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அமைந்துள்ள வேடியப்பர் கோவில் திருவிழாவிற்கு நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டனர். அதன் பின் ஆலை வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மனுக்கு முதற்கால பூசை நடைபெற்றது மாலை 6 மணிக்கு மேல் வேடியப்பர் ஆலயத்தில் உள்ள பரிபூர்ண சாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்தன் கலந்து கொண்டனர். விழாவில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பத்தினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஆலை நிர்வாகம் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கியது.