நத்தம் மலையாள கருப்பு சாமி கோவில் திருவிழா தீர்த்த ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2023 10:02
நத்தம், நத்தம் காந்திநகர் மலையாள கருப்புசாமி, மந்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்த ஊர்வலம் நடந்தது.
விழாவையொட்டி அழகர் கோவில் மலையில் இருந்து நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து அதை நத்தம் சந்தன கருப்பு கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேலதான முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக் கருப்பு கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து மலையாள கருப்பு கோவிலுக்கு கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திநகர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.