காளஹஸ்தி மகா சிவராத்திரி விழா : அன்னவாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 03:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான 17.2.2023 இன்று பகல் அன்னவாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் .
முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்ததோடு சிறப்பு பூஜைகளையும் செய்தனர். தொடர்ந்து கோயிலில் இருந்து சன்னதி வீதி வழியாக ராஜகோபுரத்திற்குள் வந்து தேவாங்குல மண்டபம் அருகில் வாகனங்களில் சுவாமி அம்மையார்களின் (உற்சவ மூர்த்திகளை) கங்கா பவானி சமேத சோமசுந்தர மூர்த்தியை அன்னப்பக்ஷி வாகனத்திலும் ,ஞானப் பிரசுனாம்பிகை தாயாரை கிளி வாகனத்திலும் அமர்த்தி நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்தி களுடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.சுவாமி ஊர்வலத்தின் போது மேளதாளங்கள் மங்கள வாத்தியங்கள் ,கோலாட்டங்கள், குதிரை, மாடுகள் உட்பட கண்கள் வகையில் பல வண்ணத் தோரணங்களுடன் ஊர்வலம் சுமார் 3 மணி நேரம் நான்கு மாட வீதிகளில் சுவாமி அம்மையார் ஊர்வலம் நடைபெற்றது.இதில் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.