பிப். 25 ல் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 06:02
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா பிப். 25ம் தேதி தொடங்குகிறது.
குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மாசித் திருவிழா இந்தாண்டு பிப். 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அரளிப்பாறை தண்டாயுதபாணி சுவாமிக்கும் காப்பு கட்டப்பட்டு அங்கும் திருவிழா தொடங்குகிறது. 10 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சதுர்வேதமங்கலத்தில் பஞ்சமூர்த்திகள் தீபாராதனை புறப்பாடு நடக்கிறது. இக்கோயிலின் மாசித் தேரோட்டம் மார்ச் 5ம் தேதி மாலை 3:30 மணிக்கு நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனம் மற்றும் கிராமத்தார்கள், மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர். மார்ச் 6ம் தேதி ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் நடத்தப்படும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடக்கிறது.