பதிவு செய்த நாள்
10
செப்
2012
10:09
தஞ்சாவூர்: தஞ்சையில் மூலை அனுமார் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு வழிபாடு வரும் 15ம் தேதி நடக்கிறது.
தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில் அமாவாசைதோறும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். வரும் 15ம் தேதி ஆவணி அமாவாசையையொட் டி சிறப்பு வழிபாடு, காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் துவங்குகிறது. காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் எனும் ஐதீகப்படி, தேங்காய் துருவல் அபிஷேகம் நடக்கிறது.
மாலை ஆறு மணிக் கு காய்கறிகளால் ஆன சிறப்பு அலங்கார சேவை, வாரம்தோறும் சனிக்கிழமை தினங்களில் நடத்தப்படும் கூட்டுப்பிரார்த்தனை நடக்கிறது. தொடர்ந்து, 18 முறை வலம் வரும் கிரிவல வழிபாடு, 1,008 எலுமிச்சை பழங்கள் கொண்ட மாலை சாற்றி சிறப்பு தீபாராதனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உச்சசனியின் வக்கிர நிவர்த்தியையொட்டி மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகி ய ராசிக்காரர்கள், சனிக்கிழமை அல்லது அமாவாசை தினத்தில் 18 அகல் தீபம் ஏற்றி, 18 லிட்டர் பால் அபிஷேம் செ ய்து, 18 முறை மவுனமாக வலம் வந்து, சனிதோஷ நிவர்த்தி காணிக்கையாக 18 ரூபாயை உண்டியலில் செலுத்தி, சிதறு தேங்காய் உடைத்தால் சனி தோஷம் வி லகும் என்பதால், ஆவணி அமாவாசையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.