பதிவு செய்த நாள்
10
செப்
2012
10:09
கீழக்கரை: கீழக்கரை அருகே கொம்பூதியில். 29ம் ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா, சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்.செல்வராஜ் தலைமையில், கோலாகலமாக நடந்தது.நேற்று முன்தினம் கிராம தேவதைகள் வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. 108 பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பக்தர்கள், "கோவிந்தா, கோபாலா கோஷம் எழுப்பி, முக்கிய வீதிகள் வழியாக கண்ணன் கோயில் வந்தடைந்தனர்.ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், சமுதாயக் கொடி ஏற்றினார். காலையில் விளையாட்டுப் போட்டிகள், நடந்தது. சந்தனகாப்புக்கு பின் இரவு 12 மணிக்கு, கண்ணபிரான் பிறந்தநாள் விழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது.நேற்று காலை மஞ்சள் நீராட்டுடன் விழா துவங்கியது. வழுக்கு மரம் ஏறும் போட்டியை, ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன் துவக்கி வைத்தார். செந்தில்குமார், முருகன், முருகானந்தம் ஆகியோர், வழுக்கு மரம் ஏறி பரிசு பெற்றனர். சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்.செல்வராஜ், உறியடி உற்சவத்தை துவக்கி வைத்தார். கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் ஊறியடித்தனர். ஊராட்சி தலைவர் முன்னாள் முத்துகிருஷ்ணன், தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.யாதவ சங்க தலைவர் எஸ்.வி.சாமி, செயலாளர் சாத்தையா, பொருளாளர் கணபதி, விழா கமிட்டியாளர்கள் அரிதாஸ், முத்து, பூமிநாதன், பாண்டி ஏ.கிருஷ்ணன், வேலு, அரியப்பன், சேதுபாண்டி, ஏ.எம்.தட்சிணாமூர்த்தி, எம்,கிருஷ்ணன், ஊராட்சி துணை தலைவர் வீரையா, ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன், வி.ஏ.ஓ.(ஓய்வு)க்கள் முருகேசன், மலைமேகம், பெரியபட்டணம் வி.ஏ.ஓ., பாலையா, மாயாகுளம் மாணவர் விடுதி காப்பாளர் சண்முகராஜன், இன்ஜினியர் கர்ணன், தி.மு.க., செயலாளர் ராமலிங்கம், கீழக்கரை வர்த்தகர் சண்முகராஜ், கொம்பூதி அன்பரசன், சபரிகுரு, ஏர்வாடி மலைச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.