கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் கோவில் செடல் மற்றும் தேரோட்டம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் அக்கிள் நாயுடு தெரு எதிரில், முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 96ம் ஆண்டு செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதையொட்டி காலை சக்தி கரகம் கொண்டு வருதலும், 12:00 மணிக்கு, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முத்தாலம்மன் எழுந்தருள, பக்தர்கள் சக்தி கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், பூஜை பொருள்களை வைத்தும் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தேர் நிலையை அடைந்து படி பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இன்று (18ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், இரவு மடிபால் உற்சவம் நடக்கிறது.