பதிவு செய்த நாள்
18
பிப்
2023
03:02
சுல்தான்பேட்டை: கோவை மாவட்டம் , சூலூர் தாலுகா , சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஜே.கிருஷ்ணாபுரத்தில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.இந்த கோவிலைப் பற்றி அங்கு பூஜை செய்யக் கூடிய அதுவும் ஒரு தலைமுறை, இரு தலைமுறை அல்ல எட்டு தலைமுறையாக பூஜை செய்யக் கூடிய "பார்த்தசாரதி என்பவர் இக்கோயிலையும் அதன் சிறப்புகளையும் பற்றி கூறினார்.
.அவர் கூறியதாவது: சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலைக்கு அருகில் உள்ள ஜே.கிருஷ்ணாபுரம் அதாவது இந்த ஊரிற்கு உண்மையான பெயர் "ஜல்லிப்பட்டி கிருஷ்ணாபுரம் அதுவே காலப் போக்கில் மருவி ஜே.கிருஷ்ணாபுரம் என்றாயிற்று. இங்கு "ஸ்ரீ பூமி நீலாநாயக சமயத கல்யாண வெங்கட்ரமண சுவாமி" திருக்கோவில் உள்ளது.இந்த திருக்கோவிலானது "சுமார் ஒரு 750 அல்லது 800 ஆண்டுகள் பழமையான புராதன கோவிலாகும்.
"பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெரும் கோயில்: இக்கோவில் இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம் "பழங்காலத்தில் கட்டப்படுகின்ற கோவில்களையெல்லாம் புராதன கோவில் என்று அழைப்பார்கள். "மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட "பெருமாள் கோவில்" இதுவாகும்.
உற்சவர் சிலை: பூர்விகப் பெருமாள் மற்றும் உற்சவர் இருக்கிறார்.உற்சவர் சிலையானது குறைந்தது இரண்டு அடி முதல் இரண்டரை அடி வரை உள்ளது.இந்த காலகட்டத்திலெல்லாம் இவ்வளவு பெரிய "பெருமாள் தாயார் எல்லாம் இருப்பது அரிது. காரணம் இது புராதன கோவிலாகும்.
ராம நவமியன்று ராமரை காண பக்தரகள் அதிகளவில் வருகை: அதே போல் இங்கு ராமர்,லக்சுமணன் , சீதா தேவி , அனுமந்தன் போன்றோர் பட்டாபிஷேகத்தோடு வந்து 700 ஆண்டுகள் இருக்கிறார்கள்.இது போக "ராமனுஜார் , மனவாளமாமுனி , நம்மாழ்வார் , ஆஞ்சநேயர் என்றால் சாதாரண ஆஞ்சநேயர் கிடையாது."வீர பக்த ஆஞ்சநேயர் அவரும் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.அதுவும் பார்த்தோமென்றால் இங்கு சித்திரை மாதத்தில் வரக் கூடிய "ராம நவமி அன்று பெரிய கட்டளதாரர் ஏற்படுத்தி மிகவும் விசேஷமாக செய்வார்கள்.அதே போல் வைகுண்ட ஏகாதசியும் மிகச் சிறப்பாக நடைபெறும்.பக்தர்களும் அதிகளவில் கலந்து கொள்வார்கள். இதே போன்று கார்த்திகை மாதத்தில் , திரு கார்த்திகை தீபம் , மற்றும் புரட்டாசி மாதத்தில் அஞ்சுகாமியும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.கடைசி கிழமையன்று "பக்தர்கள் அனைவரும் அதிகளவில் பெருமாள் சன்னதிக்கு வருகை தருவார்கள்.
தங்கு தடையின்றி விரைவில் திருமணம் நடக்கும் , குழந்தை பேறு கிடைக்கும்: இந்த கோவிலுனுடைய இன்னொரு சிறப்பு என்னவென்றால் "ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமியினை கல்யாணம் ஆகாதவர்கள் மற்றும் சச்சாதனந்த பாக்கியம் அதாவது "குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள பெருமாளிடம் வந்து தொடர்ந்து ஒரு நான்கு வாரம் அல்லது ஏழு , எட்டு வாரம் வந்து பெருமாளை வணங்கிவிட்டு சென்றால் "நம்முடைய மனதில் என்ன காரியம் நடக்க வேண்டும் என்று பெருமாளை வேண்டிக் கொள்கிறோமோ அது அந்த காரியம் சீக்கிரமாக,ஜெயமாக நிறைவேறும்.இங்குள்ள "பெருமாள் அதனை நடத்தி வைப்பார்.அதுவும் எந்தவித தங்கு,தடையில்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைப்பார்.மென்மேலும் நோய் நிவர்த்தி இதெல்லாம் சிறப்பாக இருக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக இருக்கும்: ஆவணி மாதத்தில் வரக் கூடிய "கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாக இருக்கும்.அப்போது கோவிலில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.இதே மாதிரி "உற்சவங்கள் உண்டு "வைகுண்ட ஏகாதசி அன்று அந்தந்த ஊரில் உள்ள கட்டளைதாரர்கள் வருவார்கள்.அப்போது பெருமாள் "சேஷ வாகனத்தில் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக திருவீதி வழியாக வலம் வருவார்.
கோவிலில் மூன்று பிராகரங்கள் உள்ளன: உள் பிரகாரம் , கோவிலின் அடுத்த பிரகாரம் , திருவீதி என்று மூன்று பிரகாரம் உள்ளன.இது மிகவும் சிறப்பான கோவில் , மற்றும் "பழங்கால கோயிலாகும்.சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இங்கு வருகை தந்தால் எல்லாமே மிகச் சிறப்பாக நடைபெறும் என்று கூறினார்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இக்கோவில் "இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.